LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.

கைப்பேசியில் அழைப்பவரின் பெயரைத் திரையிலேயே காண்பிக்கும் வசதியைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்குமாறு பரிந்துரைத்துள்ளது தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம்(டிராய்).

 

கைப்பேசியில் அழைப்பவரின் பெயரைத் திரையிலேயே காண்பிக்கும் வசதியைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்குமாறு பரிந்துரைத்துள்ள தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்), இந்தியாவில் விற்கப்படும் அனைத்து கைப்பேசி சாதனங்களிலும் சிஎன்ஏபி வசதி இருப்பதை உறுதிப்படுத்தப் போதிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. புதிய வசதியை அரசு அமல்படுத்தினால் தங்களுக்குப் பாதிப்பில்லை என ட்ரூ காலர் நிறுவனம் வரவேற்றுள்ளது.

 

பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் சொந்தப் பகுப்பாய்வின் அடிப்படையில் 'இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் அழைப்பாளர் பெயர் அறிவிப்பு சேவையை (சிஎன்ஏபி)அறிமுகப்படுத்துவது தொடர்பாக இறுதிப் பரிந்துரைகளை டிராய் வெளியிட்டது.

 

வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.

 

இதுதொடர்பாக டிராய் வெளியிட்ட அறிவிப்பில், மோசடி அழைப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க நுகர்வோருக்கு உதவும் நடவடிக்கையாக, இந்தியத் தொலைத்தொடர்புத் துறை கைப்பேசிகளில் அழைப்பாளர் பெயர்களைக் காண்பிக்கும் வசதி கூடுதல் சேவையாக அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.

 

ஒரு பயனாளி செல்போனுக்கு அழைப்பு வரும்போது, அழைப்பாளர் பெயர் திரையில் காட்சிப்படுத்த வேண்டும்.

 

இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் நடைமுறைப்படுத்தப்படும் சிஎன்ஏபி திட்டத்தின் தொழில்நுட்ப மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

 

பரிந்துரைகள் முழுமையாக ஏற்கப்பட்டு முறையான அறிவிப்பு வெளியான பிறகு, இந்தியாவில் விற்கப்படும் அனைத்துக் கைப்பேசி சாதனங்களிலும் சிஎன்ஏபி வசதி இருப்பதை உறுதிப்படுத்தப் போதிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

 

எனினும், மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை, ஜிஎஸ்டி ஆணையம் அல்லது அரசிடம் பதிவு செய்யப்பட்டுள்ள வர்த்தக முத்திரையில் அந்தப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

 

வாடிக்கையாளர் விண்ணப்பப் படிவத்தில் கைப்பேசி சந்தாதாரரின் பெயரின் உரிமையை நிரூபிக்கப் போதிய ஆவணங்களைச் சந்தாதாரர் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.சந்தாதாரர் வழங்கிய பெயர் அடையாளத் தகவலைச் சேவையின் நோக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று டிராய் தனது பரிந்துரைகளில் தெரிவித்துள்ளது.

 

அழைப்பாளர் பெயர் அறிவிப்பு சேவை

 

இந்தத் திட்டம் குறித்து பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு டிராய் அமைப்பிடம் மத்தியத் தொலைத்தொடர்புத் துறை கடந்த 2022-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் கேட்டுக்கொண்டது.

 

அதன்படி, இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்துவது பற்றி பொதுமக்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், கைப்பேசி உற்பத்தியாளர்கள் ஆகிய பங்குதாரர்களிடம் டிராய் கருத்துகளைக் கோரியது. பங்குதாரர்களின் கருத்துகள் தொடர்பாகக் கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச்சில் விவாதமும் நடைபெற்றது.

 

ஏறக்குறைய 40 பங்குதாரர்கள் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பித்தனர், மேலும் ஐந்து பங்குதாரர்கள் தங்கள் எதிர்க் கருத்துகளை அளித்திருந்தனர், அதன் பிறகு மார்ச் 2023-ல் நேரிடையாக விவாதிக்கப்பட்டது.

 

அதன்படி, பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் சொந்தப் பகுப்பாய்வின் அடிப்படையில் 'இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் அழைப்பாளர் பெயர் அறிவிப்பு சேவையை (சிஎன்ஏபி)அறிமுகப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை டிராய் இறுதி செய்துள்ளது.

 

நுகர்வோருக்கு நலனுக்கான அனைத்து முயற்சிகளையும் வரவேற்பதாகத் தெரிவித்துள்ள காலர் நிறுவனம், புதிய வசதியை அரசு அமல்படுத்தினால் தங்களுக்குப் பாதிப்பில்லை எனத் தெரிவித்துள்ளது.

by Kumar   on 06 Mar 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.