LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.

இஸ்ரோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ராக்கெட் என்ஜின்களுக்கான இலகுரக கார்பன்-கார்பன் முனையை (Lightweight Carbon-Carbon Nozzle For Rocket Engines) உருவாக்கி உள்ளனர். கேட்பதற்குச் சாதாரணமாக இருக்கும் இந்த விஷயம், உண்மையிலேயே ராக்கெட் என்ஜின் தொழில்நுட்பத்தில் (Rocket Engine Technology) ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஆகும்.

 

அதெப்படி? சி-சி நாஸில் (C-C Nozzle) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த புதிய வகை ராக்கெட் எஞ்சின் முனையானது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கார்பன்-கார்பன் (C-C) கலவைகள் போன்ற மேம்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இது விதிவிலக்கான பண்புகளை (Exceptional Properties) வழங்கும் என்று இஸ்ரோ கூறுகிறது.

 

 

அதாவது இது ராக்கெட் என்ஜின்களின் முக்கிய அளவுருக்களை (Vital Parameters) மேம்படுத்தும். அதில் த்ரஸ்ட் லெவல்கள் (Thrust levels), ஸ்பெசிஃபிக் இம்பல்ஸ் (Specific impulse) த்ரஸ்ட்-டூ-வெயிட் விகிதங்களும் (Thrust-to-weight ratios) அடங்கும். இதெல்லாமே சேர்ந்து லான்ச் வெஹிக்கலின் அதாவது ராக்கெட்டின் பேலோட் திறனை அதிகரிக்கும்.

 

எவ்வளவு அதிகரிக்கும்? வெறும் 15 கிலோ மட்டுமே அதிகரிக்கும். இஸ்ரோவின் இந்த புதிய லைட்வெயிட் சி-சி நாஸில் ஆனது குறிப்பாக பிஎஸ்எல்வி (Polar Satellite Launch Vehicle - PSLV) ராக்கெட்டிற்காக தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 

பிஎஸ்எல்வியின் நான்காவது ஸ்டேஜ் ஆன பிஎஸ்4, தற்போது கொலம்பியம் அலாய் (Columbium Alloy) மூலம் செய்யப்பட்ட முனைகளுடன் இரட்டை என்ஜின்களை (Twin engines) பயன்படுத்துகிறது.

 

ஆனால், மெட்டாலிக் டைவெர்ஜென்ட் உடனான சிசி நாஸிலை பயன்படுத்தினால் கிட்டத்தட்ட 67% மாஸ் ரிடெக்ஷனை அடைய முடியும். இதன் மூலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பேலோட் திறனை 15 கிலோ வரை அதிகரிக்க முடியும். விண்வெளிப் பயணத்தில் ஒவ்வொரு கிராமும் கூட முக்கியம் என்பதால்.. உண்மையிலேயே 15கிலோ என்பது ஒரு மிகப்பெரிய மேம்பாடாகும்.

 

எல்லாச் சோதனைகளும் சக்ஸஸ்! ஒடிசா மாநிலத்தில் உள்ள மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் காம்ப்ளக்ஸில் (ISRO Propulsion Complex) உள்ள ஹை-ஆல்டிட்யூட் டெஸ்ட் ஃபெசிலிட்டியில் (High-Altitude Test facility) கடந்த மார்ச் 19 அன்று, சி-சி நாஸிலுக்கான 60 வினாடிகளுக்கான ஹாட் டெஸ்ட் (60-second hot test) நடத்தப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2 ஆம் தேதியன்று 200 வினாடிகளுக்கான ஹாட் டெஸ்ட் (200-second hot test) உட்பட அடுத்தடுத்து நடத்தப்பட்ட எல்லாச் சோதனைகளுமே, சி-சி நாஸிலின் திறன்களை உறுதிப்படுத்தி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த சிசி நாஸிலின் ஒரு முக்கிய அம்சம் - இதிலுள்ள சிலிக்கான் கார்பைட்டின் ஸ்பெஷல் ஆக்ஸிடேஷன் கோட்டிங் (Special anti-oxidation coating of Silicon Carbide) ஆகும்.இந்த ஸ்பெஷல் கோட்டிங் ஆனது ஆக்ஸிஜனேற்ற சூழலில் செயல்பாட்டு வரம்புகளை (Operational limits) நீட்டிக்கிறது. கூடவே வெப்பத்தால் தூண்டப்பட்ட அழுத்தங்களைக் குறைப்பது (Thermally induced stresses) மட்டுமல்லாமல், அரிப்பு எதிர்ப்பையும் (Corrosion resistance) அதிகரிக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த புதிய சி-சி நாஸில் ஆனது உயர்ந்த வெப்பநிலையிலும் கூட இயந்திரப் பண்புகளைத் தக்கவைத்துக்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது.

 

எல்லாவற்றை விட முக்கியமாக, சிறிய மற்றும் பெரிய ஸ்பேஸ் மிஷன்களை திட்டமிட்டும் எல்லா உலக நாடுகளுக்குமே.. இஸ்ரோவின் இந்த புதிய கண்டுபிடிப்பு ஊக்கத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். குறிப்பாக மிகவும் எடை அதிகமான ஸ்பேஸ் மிஷன்களை (Super Heavy Space Missions) திட்டமிடும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிற்கும் (NASA), எலான் மஸ்க்கிற்கு (Elon Musk) சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்திற்கும்!

by Kumar   on 23 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.