LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கண்ணகி கோயில் திருவிழா கோலாகலம்.

சித்ரா பவுர்ணமியையொட்டி கண்ணகி கோயிலில் பச்சைப் பட்டு உடுத்தி, சிலம்பம் ஏந்தியபடி காட்சியளித்த கண்ணகியைத் தமிழகம், கேரளப் பக்தர்கள் ஏராளமானோர் வழிபட்டனர். 

 

தமிழக-கேரள எல்லையில், தேனி மாவட்டம் கூடலூரில் விண் ணேற்றிப்பாறை பகுதியில் மங்கலத் தேவி கண்ணகி கோயில் அமைந் துள்ளது. கூடலூர் அருகேயுள்ள பளியன் குடி வழியாக 6.6 கி.மீ. தொலைவு நடைபாதை வழி யாகவும், கேரளாவின் குமுளி, கொக்கரகண்டம் வழியாக 14 கி.மீ. தொலைவு ஜீப் பாதை வழியாகவும் செல்லலாம். 

 

கோயில் அமைந்துள்ள இடம் வனப்பகுதி என்பதால், சித்திரை மாத முழு நிலவன்று மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதன்படி, நேற்று நடைபெற்ற திருவிழாவையொட்டி அம்மனுக்கு உருக்கொடுக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. 

 

கண்ணகி பிறந்த காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு, கண்ணகிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அம்மன்பச்சைப்பட்டு உடுத்தியும், சிலம்பை கையில் ஏந்தியும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தமிழக, கேரள பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு, வளையல், மங்கலநாண் வழங்கி வழிபட்டனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. 

 

தொடர்ந்து பொங்கல் வைத்தல், பால் குடம் எடுத்தல், அட்சய பாத்திரத்தில் உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், கண்ணகியின் சிறப்பைக் கூறும் வகையில் வில்லுப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

 

இரு மாநிலங்களைச் சேர்ந்த வனம், சுகாதாரம், தீயணைப்பு, காவல் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒவ்வோர் ஆண்டும் கேரள வனப்பாதையிலேயே பக்தர்கள் அதிக அளவில் செல்வதால், அம்மாநில அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். 

 

எனவே, தமிழகத்தின் வழியே உள்ள நடைபாதையை அகலப்படுத்தி ஜீப்களை இயக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.

by Kumar   on 25 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர். மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்.
உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா? உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா?
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு. பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.
பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள். பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.