LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

விடுதலைக்குப் பின்

ஒரு கோரிக்கையை வலியுறுத்தி பல பேர் சேர்ந்து உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினார்கள் . அதில் பாதிப்பேர் ஒரு குழுவாகவும் மீதிப்பேர் இன்னொரு குழுவாகவும் அமர்ந்திருந்தனர் . ஒரே கோரிக்கைக்காகத்தானே போராட்டம் , பிறகு ஏன் இரண்டு பிரிவாக அமர்ந்திருக்கிறீர்கள் ? என்று கேட்டபோது கிடைத்த பதில் “ இதில் பாதிப்பேர் அசைவம் சாப்பிடுகிறவர்கள் . மீதிப்பேர் சைவம் . அதற்கேற்ற மாதிரி அமர்ந்து இருக்கிறார்கள் ” உண்ணாவிரதப் போராட்டம் படுகிறபாடு இது . பல போராட்டங்கள் இப்படித்தான் போலித்தனமாக அமைந்து விடுகின்றன .

விடுதலைப்போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் பெருந்தலைவர் காமராசர் . போராட்டத்தில் வெற்றி கிடைத்த பின் அதன் பலனை அனுபவிப்பதிலேயே பலர் நாட்டம் செலுத்துவார்கள் . இதிலும் மாறுபட்டே விளங்கினார் . காமராசர் விடுதலைக்குப்பின் நாட்டில் ஏற்பட்டப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திப்பதிலும் அடிமைத்தனத்தால் சீர்கெட்டுக் கிடந்த நாட்டை வளப்படுத்துவதிலுமே அவரது நாட்டம் இருந்தது . பாகிஸ்தான் பிரிவினை காந்தியடிகளின் மரணம் ஆகிய நிகழ்ச்சிகளால் கவலை கொண்டிருந்த நேருஜி போன்ற தலைவர்களுக்கு உறுதுணையாக இருந்து உரிய ஆலோசனை சொல்லும் மாமனிதராக அவர் திகழ்ந்தார் . அகில இந்திய அளவில் முக்கியமான காலங்களில் வேண்டப்பட்ட ஒரு நபராக அப்போதே அவர் உருவாகி விட்டார் . அதே நேரத்தில் தமிழ்நாட்டின் மீதும் அவருக்கிருந்த பாசத்துக்கு அளவே இல்லை .

1936- இல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஆனார் . 1937 ல் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . 1940 முதல் 1952 வரை மொத்தம் 12 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பெருமளவு வெற்றி கிடைக்காததற்கு தாமே பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் . சத்தியமூர்த்தி கர்மவீரர் காமராசருக்குக் குருவாக இருந்து வழிகாட்டினார் . தனுஷ்கோடி நாடார் என்பவர் உற்ற நண்பராக இருந்தார் . 1954- ல் மூதறிஞர் ராஜாஜி தமிழக முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தபோது அந்தப்பொறுப்பைத் தாமே ஏற்றுக்கொண்டார் . 13-04-1954 தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று அந்த தவப்புதல்வர் தமிழகத்தின் முதல்வரானது மிகப்பொருத்தம் .

யார் தங்களுடைய மனநிலை , சுபாவம் ஆகியவற்றை சூழ்நிலைகளுக்குப் பொருந்தி இருப்பதாக மாற்றிக் கொள்கிறார்களோ அவர்களே உயர்ந்து நிற்பார்கள் .

by Swathi   on 21 Aug 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.