LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை

நெல்லை மாவட்டம் சிக்க நரசய்யன் கிராமம் என்ற ஊரில் 1891-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி சரவணப்பெருமாள் - பாப்பம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் ச.வையாபுரிப் பிள்ளை. இவர் பாளையங்கோட்டை புனித சவேரியர் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் படித்து பட்டம் பெற்றார். அந்த ஆண்டு சென்னை மாகாணத்திலேயே தமிழில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று "சேதுபதி தங்க மடல் (பதக்கம்)" பெற்ற பெருமைக்குரியவர் ஆனார்.
***********************************
வையாபுரிப்பிள்ளையின் தாய்வழிப்பாட்டனார் திரு. வையாபுரிப்பிள்ளை நெல்லையின் புகழ்பெற்ற பொறியாளர். அவர் பெயர்தான் வையாபுரிப்பிள்ளைக்கு இடப்பட்டது. வையாபுரிப்பிள்ளையின் குடும்பம் பரம்பரையாகவே தமிழ்ப்புலமை மிக்கது. அவருடைய தாத்தா சங்கரலிங்கம் பிள்ளை தாமிரபரணிப் புராணம் அல்லது பொருநைமாதாப் புராணம் என்ற கவிதை நூலை இயற்றியுள்ளார். பல தோத்திர நூல்களையும் எழுதியுள்ளார். திருநெல்வேலி வீரராகவபுரத்தில் கிராம முன்சீப்பாக வெகுகாலம் பணியாற்றினார். பக்திச் சொற்பொழிவாற்றுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். வையாபுரிப்பிள்ளையின் தந்தை சரவணப்பெருமாள் பிள்ளை தமிழறிஞர், சைவ ஆய்வாளர். தமிழ் ஆர்வம் இருந்தும் வழக்குரைஞரானார்.
**********************************************
வையாபுரிப்பிள்ளையின் அக்கா தாயம்மாள் சுவர்ணவேலுப்பிள்ளை. இளையவர் சங்கரலிங்கம் பிள்ளை- திருநெல்வேலியில் கிராம முன்சீப்பாகப் பணியாற்றினார். இன்னொரு தம்பி நடராச பிள்ளை நாகர்கோவில் எஸ்.எல்.பி உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.
********************************************************
தமிழில் ஆர்வம் அதிகமிருந்தும் வையாபுரிப் பிள்ளை திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து வழக்குரைஞரானது மட்டுமல்லாமல், ஏழு ஆண்டுகள் வழக்குரைஞராகவும் பணிபுரிந்தார். பிறகு மூன்று ஆண்டுகள் திருநெல்வேலியிலும் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
***************************************
தமிழ் அறிஞர்கள் ஆச்சரியம்............
*********************************
வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த காலத்தில், வையாபுரிப் பிள்ளை எழுதிய பல கட்டுரைகளும் இலக்கிய ஆய்வுகளும் அவரை தமிழ் அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்தது. உ.வே.சாமிநாத அய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை எஸ். வையாபுரிப் பிள்ளையைத் தான் சாரும். ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு.
***************************************************
 "இரசிகமணி" டி.கே.சியுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தார் வையாபுரிப் பிள்ளை. இலக்கிய ஆர்வம் கொண்ட இவரது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில் இருந்தன. அவை அனைத்தையும் கொல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார் வையாபுரிப் பிள்ளை.
*********************************************
தமிழுக்கு பெரும் தொண்டு......
**********************************************
நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர். மனோன்மணியம் உரையுடன் தொடங்கி 1955 இல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்தது வரை தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார்.
**************************************
தமிழறிஞர்,தமிழ் காலக்கணிப்பு, தமிழ்நூல் பதிப்பு, தமிழிலக்கிய வரலாற்றாய்வு ஆகிய தளங்களில் பெரும்பங்களிப்பாற்றிய முன்னோடி. இலக்கியத் திறனாய்வாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் .தமிழாய்வில் புறவயமான , பற்றற்ற முறைமையை வலியுறுத்திய வழிகாட்டி. தமிழின் முதல் பேரகராதியை உருவாக்கியவர். மலையாளப் பேரகராதியிலும் பங்களிப்பாற்றியவர். தமிழ் நவீன அறிவியக்கத்தின் அடித்தளத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் என அறியப்பட்டவர்.
***************************************************
விருது வழங்கிய பிரிடிஷ் அரசு........
****************************************
தமிழ் அகராதி பணிக்காக பிரிட்டிஷ் அரசு வையாபுரி பிள்ளைக்கு ராவ்சாகிப் பட்டம் வழங்கியது.
*******************
எஸ்.வையாபுரிப்பிள்ளையின் மனைவி சிவகாமியம்மாள். இவர் தந்தை வேலாயுதம் பிள்ளை ’இராஜசுந்தரம்’ என்ற நாவலை எழுதியவர். வையாபுரிப்பிள்ளைக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள்.
*********************
 1956ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி தனது 65வது வயதில் இயற்கை எய்தினார் வையாபுரிப் பிள்ளை.

நெல்லை மாவட்டம் சிக்க நரசய்யன் கிராமம் என்ற ஊரில் 1891-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி சரவணப்பெருமாள் - பாப்பம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் ச.வையாபுரிப் பிள்ளை. இவர் பாளையங்கோட்டை புனித சவேரியர் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் படித்து பட்டம் பெற்றார். அந்த ஆண்டு சென்னை மாகாணத்திலேயே தமிழில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று "சேதுபதி தங்க மடல் (பதக்கம்)" பெற்ற பெருமைக்குரியவர் ஆனார்.

வையாபுரிப்பிள்ளையின் தாய்வழிப்பாட்டனார் திரு. வையாபுரிப்பிள்ளை நெல்லையின் புகழ்பெற்ற பொறியாளர். அவர் பெயர்தான் வையாபுரிப்பிள்ளைக்கு இடப்பட்டது. வையாபுரிப்பிள்ளையின் குடும்பம் பரம்பரையாகவே தமிழ்ப்புலமை மிக்கது. அவருடைய தாத்தா சங்கரலிங்கம் பிள்ளை தாமிரபரணிப் புராணம் அல்லது பொருநைமாதாப் புராணம் என்ற கவிதை நூலை இயற்றியுள்ளார். பல தோத்திர நூல்களையும் எழுதியுள்ளார். திருநெல்வேலி வீரராகவபுரத்தில் கிராம முன்சீப்பாக வெகுகாலம் பணியாற்றினார். பக்திச் சொற்பொழிவாற்றுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். வையாபுரிப்பிள்ளையின் தந்தை சரவணப்பெருமாள் பிள்ளை தமிழறிஞர், சைவ ஆய்வாளர். தமிழ் ஆர்வம் இருந்தும் வழக்குரைஞரானார்.

வையாபுரிப்பிள்ளையின் அக்கா தாயம்மாள் சுவர்ணவேலுப்பிள்ளை. இளையவர் சங்கரலிங்கம் பிள்ளை- திருநெல்வேலியில் கிராம முன்சீப்பாகப் பணியாற்றினார். இன்னொரு தம்பி நடராச பிள்ளை நாகர்கோவில் எஸ்.எல்.பி உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.

தமிழில் ஆர்வம் அதிகமிருந்தும் வையாபுரிப் பிள்ளை திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து வழக்குரைஞரானது மட்டுமல்லாமல், ஏழு ஆண்டுகள் வழக்குரைஞராகவும் பணிபுரிந்தார். பிறகு மூன்று ஆண்டுகள் திருநெல்வேலியிலும் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.

தமிழ் அறிஞர்கள் ஆச்சரியம்............

வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த காலத்தில், வையாபுரிப் பிள்ளை எழுதிய பல கட்டுரைகளும் இலக்கிய ஆய்வுகளும் அவரை தமிழ் அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்தது. உ.வே.சாமிநாத அய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை எஸ். வையாபுரிப் பிள்ளையைத் தான் சாரும். ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு.

"இரசிகமணி" டி.கே.சியுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தார் வையாபுரிப் பிள்ளை. இலக்கிய ஆர்வம் கொண்ட இவரது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில் இருந்தன. அவை அனைத்தையும் கொல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார் வையாபுரிப் பிள்ளை.

தமிழுக்கு பெரும் தொண்டு......

நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர். மனோன்மணியம் உரையுடன் தொடங்கி 1955 இல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்தது வரை தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார்.

தமிழறிஞர்,தமிழ் காலக்கணிப்பு, தமிழ்நூல் பதிப்பு, தமிழிலக்கிய வரலாற்றாய்வு ஆகிய தளங்களில் பெரும்பங்களிப்பாற்றிய முன்னோடி. இலக்கியத் திறனாய்வாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் .தமிழாய்வில் புறவயமான , பற்றற்ற முறைமையை வலியுறுத்திய வழிகாட்டி. தமிழின் முதல் பேரகராதியை உருவாக்கியவர். மலையாளப் பேரகராதியிலும் பங்களிப்பாற்றியவர். தமிழ் நவீன அறிவியக்கத்தின் அடித்தளத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் என அறியப்பட்டவர்.

விருது வழங்கிய பிரிடிஷ் அரசு........

தமிழ் அகராதி பணிக்காக பிரிட்டிஷ் அரசு வையாபுரி பிள்ளைக்கு ராவ்சாகிப் பட்டம் வழங்கியது.

எஸ்.வையாபுரிப்பிள்ளையின் மனைவி சிவகாமியம்மாள். இவர் தந்தை வேலாயுதம் பிள்ளை ’இராஜசுந்தரம்’ என்ற நாவலை எழுதியவர். வையாபுரிப்பிள்ளைக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள்.

1956ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி தனது 65வது வயதில் இயற்கை எய்தினார் வையாபுரிப் பிள்ளை.

by Kumar   on 13 Oct 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.