LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் பரப்புரை முயற்சிகள்

வள்ளுவமும் வலைத்தமிழும் -ச.பார்த்தசாரதி

வள்ளுவமும் வலைத்தமிழும்


(கீழ்காணும் 27 திருக்குறள் பரவலாக்கல், ஆவணப்படுத்துதல் செயல்பாடுகளில் வலைத்தமிழ் தனித்தும், பல அமைப்புகளுடன் இணைந்தும் செயல்படுகிறது)
ச.பார்த்தசாரதி, நிறுவனர், வலைத்தமிழ், ஒருங்கிணைப்பாளர், உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

www.Thirukkural.ValaiTamil.Com

  1. திருக்குறள் , அதன் பொருள் உள்ளடக்கிய வார்த்தைகளில் எதை கூகுளில் தேடினாலும் வலைத்தமிழில் உள்ள திருக்குறள் பகுதிக்கு வாசகர்களை அழைத்துவரும் வகையில் கூகுள் தேடலில் சேர்க்கப்பட்டு, ஆண்டுக்குப் 24 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். அதிகமாகத் திருக்குறள் வாசிக்கும் முன்னணி தளமாக விளங்குகிறது. உலகின் பல நாடுகளில் தமிழ்ப்பள்ளிகள் இதைத் திருக்குறள் போட்டிகளில் குறிப்பிடுகிறார்கள்.https://www.valaitamil.com/sonia-gandhi-photopg182-294-8
  1. திருக்குறள் உலகெங்கும் இதுவரை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்த ஆய்வு, தொகுப்பு தமிழ்ச் சமூகத்தில் இதுவரை நடைபெறவில்லை. இந்த ஆய்வை செய்யாமல் திருக்குறளை தேசிய நூலாக கொண்டுசெல்வதோ, யுனெசுகோ அங்கீடாரத்த்திற்கு சென்று அங்கு எழும் கேள்விகளை எதிர்கொள்வதோ சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, திருக்குறளில் ஒரு வரலாற்றுப்பணியாக  "உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டம்" என்று திட்டம் 2018ல் வட அமெரிக்காவில் தொடங்கப்பட்டு தொடங்கப்பட்டு கிடைத்தற்கரிய மொழிபெயர்ப்புகள் “Thirukkural Traslations in World Languages” என்ற நூலாக ஆறு ஆண்டுகள் ஆய்வறிக்கையாக, நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

            

URL: https://www.valaitamil.com/literature_thirukkural_thirukkural-translations/

  1. வலைத்தமிழ் திருக்குறள் பக்கத்தில் 1330 திருக்குறளுக்கும் ஓவியத்துடன், ஒலி , குறள் விளக்கம் தமிழிலும் ஆங்கிலத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.
  1. இரண்டு மேம்பட்ட திருக்குறள் செயலிகளை (Mobile Apps) முறையாகத் தமிழ் தெரிந்தவர்களும், தெரியாதவர்களும் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்து 2017-ல் iphone, Android செயலிகளாக வெளியிடப்பட்டது. செயலிகள்:Thirukkural Audio, Kural .
  2. வலைத்தமிழ் -வள்ளுவர் குரல் குடும்பம் இணைந்து 100-க்கும் மேற்பட்ட திருக்குறள் சிந்தனையாளர்களை, ஆளுமைகளை , மொழிபெயர்ப்பாளர்களை அவர்கள் கண்ணோட்டத்தில் திருக்குறள் கருத்துகளை "எனைத்தானும் நல்லவை கேட்க" என்ற தொடர் நிகழ்ச்சியாக ஆவணப்படுத்தப்படுகிறது.

இதுவரை தொகுக்கப்பட்டுள்ள காணொளிகளைக் காண

https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjTMt8UGwtIytLXFxNvW1y9T

  1. ஒவ்வொரு குறளுக்கும் எளிதான விளக்க உரைகளை காணொளியாகத் தொகுக்கும் திட்டம் தொடங்கப்பட்டு தொடர்ச்சியாக தரமான உரைகள் சேர்க்கப்படுகிறது.

www.Thirukkural.ValaiTamil.com | https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjT8G9YCpeewLmkpI2zhqO2-

  1. அமெரிக்காவின் பனை நிலம் தமிழ்ச்சங்கம் இசையுடன் உருவாக்கியுள்ள "திருக்குறள் மறையோதல்" ஒலி வடிவத்தை, காணொளியாக்கி திருக்குறள் வரிகள் ஆங்கிலம்-தமிழில் வரும் வகையில் 133 காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதை உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கப் பயிற்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

 

https://www.youtube.com/watch?v=45ZEg1ebp-k

  1. திருக்குறளுக்கு ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன் அவர்கள் தீட்டிய ஓவியத்தை அறிந்து , அவருக்குப் பாராட்டு தெரிவித்து, பட்டயம் வழங்கி சிறப்பித்து, அதை உலக மக்களுக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் அவரது பெயரில் 1330 திருக்குறளுக்கும் "திருக்குறள் ஓவியம்" வலைத்தமிழ் திருக்குறள் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

  www.Thirukkural.ValaiTamil.com

  1. உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இலவச இணையவழி முற்றோதல் பயிற்சி தொடங்கி வலைத்தமிழ்.டிவி வழியே வெற்றிகரமாக நடந்துவருகிறது.

www.ValaiTamil.TV

  1. இதுவரை பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்ட முனைவர் பட்டங்களில் , திருக்குறள் சார்ந்த தலைப்புகளில் செய்யப்பட்ட ஆய்வுகள், ஆய்வாளர்களைத் தொகுத்து வெளியிட சிறப்புப்பகுதி உருவாக்கப்பட்டு, குழு அமைத்து தொகுக்கப்படுகிறது.

https://www.valaitamil.com/literature_thirukkural_Doctorate-in-Thirukkural/

  1. உலகெங்கும் உள்ள திருக்குறள் கவனகர்கள் , தசாவதானிகள், திருக்குறள் சார்ந்த புதிய உத்திகளைக் கையாள்பவர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தொகுக்க இப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

https://www.valaitamil.com/literature_thirukkural_thirukkural-kavanagar/

  1. திருக்குறளை இயக்கமாக பள்ளி மாணவர்களிடத்தில் கொண்டுசென்று, அரசு வழங்கும் 15000 ரூபாய் ஊக்கத்தொகை, சான்றிதழை அதிக மாணவர்கள் பெற்று வாழ்வியலில் கடைபிடிக்க "உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்" என்ற அமைப்பை வலைத்தமிழ் , வள்ளுவர் குரல் குடும்பம், S2S அமைப்புகள் இணைந்து நடத்துகிறது. அமெரிக்காவின்  தமிழ் வளர்ச்சி மன்றம், தமிழிருக்கை அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இலவச நூல்களை தமிழ்நாடு , புதுவை மாவட்டங்களில் வழங்கி , இலவசத் திருக்குறள் முற்றோதல் பயிற்சி வழங்கப்படுகிறது.
  1. உலக அளவில் திருக்குறள் பற்றாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை இணைக்க "குறள் வழி" மாத இதழ் தொடங்கப்பட்டு இணையவழியிலும், தமிழ்நாடு, புதுவை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அச்சுப்பிரதியாகவும் அனுப்பப்படுகிறது.

https://www.valaitamil.com/literature_thirukkural_kural-vazhi/

  1. யுனெசுகோவிற்குத் திருக்குறளைக் கொண்டுசெல்லும் நோக்கில் (Thirukkural for UNESCO) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு யுனெசுகோவின் இயக்குநராக 14 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வுபெற்ற மொரிசியஸ் நாட்டு கல்வியமைச்சர் முனைவர்.ஆறுமுகம் பரசுராமன் தலைமையில் குழு உருவாக்கப்பட்டு உலகத் திருக்குறள் அறக்கட்டளை (மொரிசியஸ்), வள்ளுவர் குரல் குடும்பம் (இந்தியா) , வலைத்தமிழ் (அமெரிக்கா), தமிழ் வளர்ச்சி மன்றம் (ஆஸ்திரேலியா) இணைந்து பல திருக்குறள் செயல்பாடுகளை செய்துவருகிறது.
   

URL: https://www.valaitamil.com/literature_thirukkural_Thirukkural-Unesco/

  1. திருக்குறள் சார்ந்த நூல்கள் தொகுக்கப்பட்டுள்ள நூலகங்களை , தனி மனிதர்களின் சேகரங்களை அறிந்து அவற்றை ஆவணப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

https://www.valaitamil.com/literature_thirukkural_thirukkural-libraries/

  1. இதுவரை பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்ட முனைவர் பட்டங்களில் , திருக்குறள் சார்ந்த தலைப்புகளில் செய்யப்பட்ட ஆய்வுகள், ஆய்வாளர்களைத் தொகுத்து வெளியிட சிறப்புப்பகுதி உருவாக்கப்பட்டு, குழு அமைத்து தொகுக்கப்படுகிறது.

https://www.valaitamil.com/literature_thirukkural_Doctorate-in-Thirukkural/

  1. ஒவ்வொரு நாட்டிலும் , மாநில, மாவட்ட அளவில் இயங்கும் திருக்குறள் களப்பணி செய்யும் அமைப்புகளை, மன்றங்களை அடையாளம் கண்டு பட்டியலிட்டு எளிதாகத் தேடும் வகையில் தொகுத்து வெளியிட சிறப்புப் பகுதி உருவாக்கப்பட்டு தன்னார்வலர் குழு அமைத்து தொகுக்கப்படுகிறது.

https://www.valaitamil.com/literature_thirukkural_Thirukkural-Organizations/

  1. திருக்குறளில் வெளிவந்துள்ள 6000க்கும் மேற்பட்ட நூல்களைத் தொகுத்துப் பட்டியலிடும் சிறப்புப் பகுதி உருவாக்கப்பட்டுத் தொகுக்கப்படுகிறது.

https://www.valaitamil.com/literature_thirukkural_thirukural-books/

  1. திருக்குறளுக்காக பல நூற்றாண்டுகளாக உழைத்த அனைவரது அர்ப்பணிப்பை, பங்களிப்பைப் போற்றும் வகையில் அவர்களைக்குறித்த வரலாற்றை, பங்களிப்பை முழுமையாகத் தொகுத்து வெளியிடவும், அவர்களின் பிறந்த நாள், நினைவுநாளை அவர்களின் பங்களிப்புடன் கூடிய குறிப்போடு மக்களுக்குப் பகிர்ந்து போற்றவும், அவர்கள் பிறந்த ஊரில் அவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்தவும் திட்டமிட ஏதுவாக விவரங்கள் தொகுக்கப்படுகிறது.

https://www.valaitamil.com/literature_thirukkural_thirukkural-scholars/

  1. முனைவர் பட்டம் இல்லாமல் பன்னாட்டுக் கருத்தரங்கங்கள், திருக்குறள் மாநாடுகளில் வாசிக்கப்படும் திருக்குறள் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட சிறப்புப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சேர்ப்பதன்மூலம் ஆய்வாளர் தங்களது பங்களிப்பைப் பரவலாக மக்களிடம் கொண்டுசெல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

https://www.valaitamil.com/literature_thirukkural_thirukkural-research-articles/

  1. திருக்குறள் முற்றோதலில் இளநிலை (முற்றோதல்) முடித்தவர்கள், முதுநிலை (பொருள் உணர்ந்தவர்கள்) என்று இரு பகுதிகளாகக் கடந்த 25 ஆண்டுகளாக முடித்த சுமார் 1200 பேரின் விவரங்களைத்   தொகுத்து நாடு, மாநிலம், பயிற்சியாளர் , ஆண்டு, மாவட்ட அளவில் பட்டியலிட்டு , எளிதில் தேடும் வசதியை உருவாக்குதல், திருக்குறள் முடித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க, பல உதவிகளை செய்ய ஏதுவாக சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டு தரவுகள் சேர்க்கப்படுகிறது.

 

https://www.valaitamil.com/mutrothal-students-register-list.php

  1. தற்போது வலைத்தமிழ் தொகுத்துள்ள 6 உரைகளோடு மேலும் 15க்கும் மேற்பட்ட உரைகளை ஒரே இடத்தில் கிடைக்கச்செய்யவும், திறனாய்வு செய்யவும் வசதியாக இணையத்தளத்தில் வசதி செய்யப்பட்டு , திருக்குறள் உரைகள் தொகுக்கப்படுகிறது.
  1. வள்ளுவர் குரல் குடும்பம் முன்னெடுக்கும் "நவில்தொறும் நூல்நயம்" வாராந்திர நிகழ்ச்சியில் இணைந்து ஒவ்வொரு திருக்குறள் நூல்களைக் குறித்த ஆளுமைகளின் கலந்துரையாடல் காணொளிகள் ஆவணப்படுத்தப்படுகிறது.
  1. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்விக்கூடங்களில் திருவள்ளுவர்  சிலை நிறுவவும், மாநிலம் முழுதும் ஒவ்வொரு ஊரிலும் ஒரு திருவள்ளுவர் சிலை நிறுவவும் திருக்குறள் அமைப்புகளோடு  இணைந்து முயற்சி மேற்கொள்ளப்படும்.  மேலும் , சிலைகள் சென்ற இடங்களில் திருக்குறள் வாழ்வியல் மன்றங்கள் உருவாகி திருக்குறள் பரவலாக்கல் நடைபெற முயற்சி மேற்கொள்ளப்படும்.
  2. புலவர் இரா. இளங்குமரனார்  அவர்கள் இயற்றிய திருக்குறள் மந்திரங்கள் - 108 போற்றி அகவல் ஒலிக்கு ஏற்ப தமிழ் ஆங்கிலத்தில் வரிகளை படித்து மனப்பாடம் செய்ய வசதியாக காணொளியாக்கி  மாணவர்களிடம் கொண்டுசெல்லவும், பள்ளிகளில் இதை காலையில் பயன்படுத்தவும் முயற்சிமேற்கொள்ளப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=m6OmQFlXtaQ&t=330s

  1. உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் முன்னெடுப்பில் திருக்குறள் வாழ்வியல் கருத்துகளை மக்களிடம் வேகமாக கொண்டுசேர்க்க தேவையான வழிமுறைகளை ஆராய்ந்து , திருக்குறள் முற்றோதல், வகுப்பு எடுக்கும் ஆற்றல் உடைய முழுநேர ஊழியர்களை மாவட்டத்திற்கு ஒருவர் என மொத்தம் 38 (தமிழ்நாடு), புதுவை, காரைக்கால் - 2 என 40 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்  திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கென அந்தந்த மாவட்ட திருக்குறள் உள்ள ஆர்வலர்கள் இதை பொறுப்பேற்கவும், அவர்கள் வணிகத்திற்கு துணைநிற்கவும் திட்டமிடப்பட்டு நடைமுறைப்பபடுத்தப்படுகிறது.

இணையத்தில் முழு விவரங்களைக் காண:

www.Thirukkural.ValaiTamil.Com

 

by Swathi   on 21 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு
சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும்  திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும் திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது
தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து
அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல்  பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல் பரிசளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள் ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள்
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.